#RugbyWorldcup:உலகக்கோப்பை ரக்பி தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற முதலாவது காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே இங்கிலாந்து அணி தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே பின்னடைவை மட்டுமே சந்தித்தது.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி ஆட்டநேரமுடிவில் 40-16 என்ற புள்ளிக்கணக்கில் ஆஸ்திரேலிய அணியைப் பந்தாடியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி உலகக்கோப்பை ரக்பி தொடரின் காலிறுதிப்போட்டியில், வெற்றி பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க:#RugbyWorldCup: அயர்லாந்தை பொளந்துக்கட்டி அரையிறுதியில் எண்ட்ரி தந்த பிளாக்பேக்ஸ்!