சர்வதேச தடகள கூட்டமைப்பால் வருடந்தோறும் ஆண்டின் சிறந்த தடகள வீரர், வீராங்கனைகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தாண்டிற்கான தடகள வீரர் வீராங்கனை விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பில் இந்தாண்டின் சிறந்த தடகள வீரராக கென்யாவின் மாரத்தான் ஓட்டபந்தய வீரர் ஏலியுட் கிப்ட்சோகேக்கு வழங்கப்படுவதாக சர்வதேச தடகள கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கென்யாவின் கிப்ட்சோகே கடந்த அக்டோபர் மாதம் ஆஸ்திரியாவில் நடைபெற்ற இனியாஸ் 1:59 சேலன்ஞ் 42.2 கிமீ அளவிலான மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை 1 மணி 59 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்ததற்காக இந்த விருது வழங்கப்படுவதாக சர்வதேச தடகள கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதேபோல், ஆண்டின் சிறந்த தடகள வீராங்கனையாக அமெரிக்காவின் தலிலா முஹமது தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தோஹாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தடகளப்போட்டியின் 400 மீட்டர் தடைதாண்டுதல் ஓட்டத்தில் தங்கம் வென்று புதிய சாதனையை படைத்தவர். இதன் காரணமாக இவருக்கு இந்த விருதினை வழங்குவதாக சர்வதேச தடகள கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நிலைத்து ஆடும் பாபர் ஆசம்..! தோல்வியைத் தவிர்க்குமா பாகிஸ்தான்?