லண்டன்:விம்பிள்டன் 2022 தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி நேற்று (ஜூலை 9) நடைபெற்றது. இதில், உலகின் 2ஆம் நிலை வீராங்கனையும், துனிசியாவை சேர்ந்தவருமான ஓன்ஸ் ஜபீர், உலகின் 23ஆம் நிலை வீராங்கனையும், கஜகஜஸ்தான் நாட்டைச் சேர்ந்த எலினா ரைபாகினா உடன் மோதினார். இருவரும் ஒருமுறை கூட பட்டம் வென்றதில்லை என்பதால், அதிக எதிர்பார்ப்பு எழுந்தது.
போட்டியின் முதல் செட்டை ஜபீர் (3 - 6) வென்று முன்னிலை பெற்றார். ஆனால், இரண்டாவது செட் முதல் எலினா தனது வேகத்தை அதிகரித்து புள்ளிகளை பெற தொடங்கினார். இதனால், அடுத்தடுத்த இரண்டு செட்களை வென்று (6-2, 6-2) ரைபாகினா தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.