இந்திய அணியின் நட்சத்திர ஓட்டப் பந்தய வீராங்கனையாக வளம்வருபவர் டூட்டி சந்த். இவர் தற்போது விலங்குகள் பதுகாப்பு அமைப்பான பீட்டா இந்தியா அமைப்புடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
மேலும், இது குறித்து அவர் கூறுகையில், ' என்னுடைய நண்பர் பீட்டா இந்தியா அமைப்பில் செயல்பட்டு வருகிறார். அவரின் செயல்பாடுகள் என்னை மிகவும் கவரும் வகையில் அமைந்ததினால், நானும் என்னை இந்த அமைப்போடு இணைந்து கொள்ள விரும்பினேன்' எனத் தெரிவித்தார்.
மேலும் பீட்டா இந்தியா அமைப்பில் டூட்டி சந்த், தன்னை இணைத்து கொண்டதின் மூலம், விராட் கோலி, ரோஹித் சர்மா, சனியா மிர்ஷா ஆகியோரைத் தொடர்ந்து விளையாட்டுத் துறையைச் சேர்ந்த மேலும் ஒரு நபர் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
ஓட்டப்பந்தய வீராங்கனையான டூட்டி சந்த், பீட்டா அமைப்பில் இணைந்த முதல் ஓட்டப்பந்தய வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை உறுதிசெய்யும் வகையில் அவர் பீட்டா இந்தியா அமைப்பின் சார்பாக, விளம்பரப் படத்தில் நடிப்பதற்கும் ஒப்பந்தமாகியுள்ளார்.
இதையும் படிங்க: டெங்குவால் பாதிக்கப்பட்ட இலங்கை வீரர்; பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகல்!