சமீபத்தில் நான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர். என் ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் வாழ ஆசைப்படுகிறேன் என இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த் சமீபத்தில் கூறியிருந்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
'தன்பாலின உறவில் உள்ளதற்கு பெருமைப்படுகிறேன்' - டூட்டி சந்த்!
"தன்பாலின உறவில் உள்ளது எவ்வித தவறும் இல்லை. தன் பாலின உறவில் இருப்பதற்காக பெருமை கொள்கிறேன்" என்று, இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த் தெரிவித்துள்ளார்.
இதற்கு, டூட்டி சந்தை மிரட்டி இவ்வாறு கூறவைத்துள்ளனர் என டூட்டி சந்த் சகோதரி தெரிவித்தார். இந்நிலையில் இதுகுறித்து பேசிய டூட்டி சந்த், "எனது அக்கா என்னை ரூ.25லட்சம் பணம் கேட்டு மிரட்டுகிறார். எனது சகோதரருக்கு ஏற்பட்ட நிலை தான் இப்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. எனது சகோதரரின் மனைவியை பிடிக்காததால், இதேபோல் செய்தார். தற்போது எனக்கும் இதே நிலைமைதான் ஏற்பட்டுள்ளது. ஆனால் நான் எனது குடும்பத்திற்காக பயப்பட வேண்டியதில்லை. தன்பாலின உறவில் உள்ளதற்காக பெருமைகொள்கிறேன். இதில் எந்த தவறும் இல்லை. தற்போது எனது கவனம் முழுவதும் உலக சாம்பியன்ஷிப் தொடரில்தான் உள்ளது" என்று தெரிவித்தார்.