கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் 59 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், மூன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றால், உலகம் முழுவதும் நடைபெறவிருந்த ஏராளமான விளையாட்டு தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கார்பந்தய தொடர்களில் மிகவும் பிரபலமானதாக கருதப்படுவது டச்சு ஃபார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ். தற்போது கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக இந்த டச்சு ஃபார்முலா ஒன் கார்பந்தயம், அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக, சார்வதேச கார்பந்தய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து டச்சு கார்பந்தய குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக டச் ஃபார்முலா ஒன் கார்பந்தய தொடர், அடுத்தாண்டுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. ஏனெனில், தற்போது இருக்கும் சூழ்நிலையில் பார்வையாளர்களை கொண்டு தொடரை நடத்துவது சாத்தியமற்றது. அதனால் ஃபார்முலா ஒன் கூட்டமைப்பின் நெறிமுறைகளின் படி, இத்தொடரை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளது.
1985ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த டச்சு ஃபார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் தொடர், ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இதையும் படிங்க:ஸ்பெயினில் இனி ஒவ்வொரு நாளும் லா லிகா போட்டிகள்தான்!