2014, 2018 ஆகிய ஆண்டுகளில் நடந்த காமன்வெல்த் பளு தூக்குதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் சஞ்சிதா சானு. 2017ஆம் ஆண்டு இவருக்கான அர்ஜுனா விருது பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது. இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதனிடையே 2017ஆம் ஆண்டு நடந்த பளுதூக்கு போட்டியின்போது சஞ்சிதா சானு ஊக்கமருந்து பயன்படுத்தியாகக் கூறி, சஞ்சிதா சானுவுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனத்தில்மேல் முறையீடு செய்த சஞ்சிதா சானுவுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்தது. இதையடுத்து அவருக்கு விதிக்கப்பட்ட தடை முடிவுக்கு வந்தது.