தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#IAAFDoha2019: தடை தாண்டுதல் ஓட்டத்தில் அமெரிக்க வீரர் தங்கம் - தடை தாண்டுதல் ஓட்டத்தில் அமெரிக்க வீரர் தங்கம்

தோஹா: உலக சாம்பியன்ஷிப் தடகள தொடரின் 110 மீ தடை தாண்டுதல் ஓட்டப்பந்தயப் போட்டியில் அமெரிக்க வீரர் கிராண்ட் ஹோலோவே தங்கப்பதக்கம் வென்றார்.

Holloway

By

Published : Oct 3, 2019, 3:17 PM IST

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற 110 மீ தடை தாண்டுதல் ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்க வீரர் கிராண்ட் ஹோலோவே 13.10 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். இதில் இரண்டாம் இடம் பிடித்த ரஷ்ய வீரர் செர்கே சுபென்கோவ் (13.15 விநாடிகள்) வெள்ளியையும் மூன்றாம் இடம்பிடித்த ஃபிரான்சின் பாஸ்கர் மார்டினாட் லகார்தே வெண்கலத்தையும் கைப்பற்றினர்.

முன்னதாக இந்தத் தடை தாண்டுதலில் நடப்பு சாம்பியனான ஜமைக்க வீரர் ஓமர் மெக்லியடு தடுமாறி விழுந்து, ஸ்பெயின் வீரருக்கு இடையூறாக இருந்த காரணத்திற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details