தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்! - திவ்யான்ஷ் 250.1 புள்ளிகளைப் பெற்று தங்கப்பதக்கத்தை தட்டி சென்றார்

சீனா: உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடரின் ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் திவ்யான்ஷ் சிங் பன்வார் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

ISSF Shooting World Cup

By

Published : Nov 21, 2019, 2:51 PM IST

உலக துப்பாகி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், உலகக் கோப்பைத் துப்பாக்கி சுடுதல் போட்டி சீனாவில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவு, இறுதிப் போட்டியில் இந்தியாவின் திவ்யான்ஷ் சிங் பன்வார் தகுதி பெற்றிருந்தார்.

இதில் அசத்தலாக விளையாடிய திவ்யான்ஷ் 250.1 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். 250.0 புள்ளிகளை பெற்ற ஹங்கேரியின் பெனி இஸ்டவன் வெள்ளிப்பதக்கத்தையும், 228.4 புள்ளிகளைப் பெற்ற ஸ்லோவேக்கியாவின் ஜானி பேட்ரிக் வெண்கலப் பதக்கத்தையும் தட்டி சென்றனர்.

இதன் மூலம் இன்று ஓரே நாளில் இந்தியா உலகக் கோப்பை துப்பாகி சுடுதல் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக இந்தியா மகளிர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இளவேனில் வாளறிவனும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கரும் தங்கம் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மீண்டும் தங்கம் வென்று சாதனைப் படைத்தார் இளவேனில்!

ABOUT THE AUTHOR

...view details