தேனி மாவட்டம், பெரியகுளத்தில் கலைமுதுமணி அண்ணாவித்தேவர் சிலம்பப் பயிற்சி பள்ளி சார்பாக மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி நடைபெற்றது.
பெரியகுளம் சாய்பாபா கோவில் வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 210 மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
மினி சப் - ஜூனியர், சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில், தமிழர்களின் வீரவிளையாட்டான சிலம்பாட்டம், வாள்சுற்று ஆகிய போட்டிகள் தனி நபர் திறமை மற்றும் தொடு சிலம்பம் ஆகிய இரண்டு பிரிவுகளில் நடைபெற்றன.
சிலம்பாட்டத்தில் மிரட்டிய பள்ளி மாணவர்கள் இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் நான்கு பிரிவுகளில் நடந்த போட்டிகளில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த மாணவர்கள், அ்டுத்த கட்டமான மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.
இதையும் படிங்க:அரசுப் பள்ளிகளிலும் சிலம்பக் கலை வளர வேண்டும்!