தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பெரம்பலூரில் மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள்: பள்ளி மாணவர்கள் ஆர்வம் - இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வர்

பெரம்பலூர்: மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டியில் 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

district level carrom

By

Published : Oct 30, 2019, 5:12 PM IST

பெரம்பலூர் மாவட்டம் டாக்டர் எம்ஜிஆர் நினைவு விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தொடங்கிவைத்தார். இந்தப் போட்டியில் பெரம்பலூர் மாவட்டத்தின் 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை ஒரு பிரிவாகவும் ஐந்து முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை ஒரு பிரிவாகவும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன.

பெரம்பலூரில் மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் இன்று தொடக்கம்

இப்போட்டியில் முதல் மூன்று இடம்பெறும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. மேலும் இப்போட்டியில் வெற்றிபெறுபவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வர் எனப் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:கிரிக்கெட் சங்கமத்தின் சாதனையாளன் சங்கா

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details