2018ஆம் ஆண்டு கவுகாத்தியில் நடந்த தேசிய வட்டு எறிதல் போட்டியில் 58.41 மீ வீசி தங்கம் வென்றவர் சந்தீப் குமாரி. அப்போது இவரது ரத்த மாதிரிகளை தேசிய ஊக்கமருந்து ஆய்வகம் சார்பாகச் சோதனைசெய்யப்பட்டது. அதில் தடைசெய்யப்பட்ட மருந்துகள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்படவில்லை.
இதையடுத்து இவரது ரத்த மாதிரிகள் கனடாவின் மாண்ட்ரியலில் உள்ள ஊக்கமருந்து ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டது. அந்தச் சோதனையில் அவர், அனபாலிக் ஸ்டெராய்டு மெடினோலோன் (Anabolic Steroid Metenolone) என்ற தடைசெய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க நான்கு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் 2018ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதியிலிருந்து 2018ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதிவரை சந்தீப் குமாரி வாங்கிய அனைத்து பதக்கங்களும் திரும்பப் பெறப்படுகின்றன.