தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

துபாய் : டாப் 10இல் இடம்பிடிக்காமல் தவறவிட்ட இந்திய இணை! - தீக்ஷா டாகர்

துபாய் ஒமேகா மூன்லைட் கிளாசிக் பகலிரவு கோல்ப் போட்டியில் இந்தியாவின் அதிதி - தீக்‌ஷா தாகர் இருவரும் 18ஆவது இடத்தில் நிறைவு செய்தனர்.

diksha-and-aditi-in-with-a-shot-at-finish-in-dubai
diksha-and-aditi-in-with-a-shot-at-finish-in-dubai

By

Published : Nov 6, 2020, 8:27 PM IST

ஒமேகா மூன்லைட் கிளாசிக் கோல்ப் போட்டியின் இரண்டாவது சுற்றோடு இந்திய கோல்ப் வீரர் தீக்‌ஷா தாகர் 18ஆவது இடத்தில் நிறைவு செய்து சக இந்திய வீராங்கனை அதிதி அசோக்குடன் வெளியேறினார்.

ஒமேகா துபாய் மூன்லைட் கிளாசிக் கோல்ப் போட்டிகள் துபாயில் நடந்து வருகின்றன. இதில் இந்திய வீராங்கனைகளான தீக்‌ஷா தாகர், அதிதி அசோக் ஆகிய இந்திய வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதன் கடைசி இந்திய இணை டாப் 10 இடங்களுக்குள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 18ஆவது இடம்பிடித்து இத்தொடரை அவர்கள் முடித்துள்ளனர்.

அதிதி லுக்ரேஷியா, கொலம்போட்டோ ரோஸ்ஸோ, கேப்ரியல் கோவ்லி ஆகியோருடன் குழு அமைத்து ஆடினார். மேலும் தீக்,ஷா ஹீரோ மகளிர் இந்திய ஓபன் வெற்றியாளரான கிறிஸ்டின் வோல்ஃப் மற்றும் ஜஸ்டின் ரோஸ் லேடீஸ் தொடரில் வென்ற கேப்ரியல் கோவ்லி ஆகியோருடன் விளையாடினார்.

ஸ்வீடு கரோலின் ஹெட்வெல், முதல் சுற்றில் 70 - 65, மெகன் மெக்லரென் 69 - 67, எல்பிஜிஏ வீராங்கனை மிஞ்சி லீ 72 - 66 என்ற புள்ளிகள் பெற்றனர். அதனைத் தொடர்ந்து லாரா 67 - 70, செலின் 67 - 71, லிடியா 68 - 70 என இடம்பிடித்தனர்.

வரலாற்றில் முதல்முறையாக பகலிரவு கோல்ப் போட்டிகளின் முதல் இரண்டு சுற்றுகளில், அனுபவ வீரர்கள், அமெர்ச்சூர் வீரர்களுடன் கூட்டணி அமைத்து இந்தப் போட்டிகளில் ஆடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மீண்டும் இப்படியே 80 நாள் பயோ-பபுளில் இருக்கணுமா? விராட் கோலி மிரட்சி!

ABOUT THE AUTHOR

...view details