தமிழ்நாடு

tamil nadu

குடியரசுத்தலைவர் கையில் உயரிய விருதுகளை வாங்கிய விளையாட்டு வீரர்கள்!

By

Published : Aug 29, 2019, 9:53 PM IST

டெல்லி: உயரிய விருதான கேல் ரத்னா விருதைப் பெற்ற முதல் பாரா ஒலிம்பிக் வீராங்கனை என்ற பெருமையை தீபா மாலிக் பெற்றுள்ளார்.

தீபா மாலிக்

மறைந்த ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்தின் பிறந்தநாள் 2012ஆம் ஆண்டிலிருந்து தேசிய விளையாட்டு நாளாக கொண்டாடப்படுகிறது. அவரின் 114ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் விளையாட்டில் மிக உயரிய விருதான கேல் ரத்னா, அர்ஜூனா விருது உட்பட பல விருதுகளை விளையாட்டு வீரர்களுக்கு வழங்குவது வழக்கம்.

தேசிய விளையாட்டு நாள்

உயரிய விருதான கேல் ரத்னா விருது மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயரில் 1991ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கேல் ரத்னா விருது வாங்கும் வீரர்களுக்கு ரூ.7.5 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும். இந்த விருதுகளை இந்திய குடியரசுத் தலைவர் விளையாட்டு வீரர்களுக்கு வழங்குவார்.

கேல் ரத்னா விருது

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வீரர்களுக்கு வழங்கியுள்ளார். ஆகஸ்ட் மாதம் எந்தெந்த வீரர்களுக்கெல்லாம் விருதுகள் வழங்கப்படுமென, ஆகஸ்ட் 20ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விருது அறிவிக்கப்பட்ட வீரர்களில் சிலர் வேறு வேறு நாடுகளில் போட்டியில் பங்கேற்று வருவதால், விருது வாங்குவதற்கு அவர்களால் வர இயலவில்லை. இருப்பினும், மற்ற வீரர்கள் மகிழ்ச்சியுடன் குடியரசுத் தலைவரிடம் விருதுகளை வாங்கினர்.

விருதுகளும் வாங்கிய வீரர்களின் விபரமும்:

கேல் ரத்னா விருது: தீபா மாலிக் (பாரா தடகளம்), பஜ்ரங் புனியா (மல்யுத்தம்)

அர்ஜூனா விருது: இந்த விருது 19 வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவர்களின் விவரம் பின்வருமாறு:

ஜடேஜா (கிரிக்கெட்), தஜிந்தர்பால் சிங் (தடகளம்), சோனியா லதெர் (குத்துச்சண்டை), பாஸ்கரன் (ஆணழகன் போட்டி), பிரமோத் பகத் (பாரா பேட்மிண்டன்), சிம்ரன் சிங் குர்ஜார் (பாரா தடகளம்), சுந்தர் சிங் குர்ஜார் (பாரா தடகளம்), கவுரவ் சிங் கில் (கார் பந்தயம்), முகம்மது அனாஸ் யாகியா (தடகளம்), குர்பிரீத் சிங் சந்து (கால்பந்து), சிங்லேன்சனா சிங் கங்குஜம் (ஹாக்கி), அஜய் தாகூர் (கபடி), அஞ்சும் மௌட்கில் (துப்பாக்கி சுடுதல்), பாமிதிபதி சாய் ப்ரனீத் (பேட்மிண்டன்), தஜிந்தர்பால் சிங் தூர் (தடகளம்), ஹர்மீத் ராஜூல் தேசாய் (டேபிள் டென்னிஸ்), பூஜா தண்டா (மல்யுத்தம்), ஃபவுத் மிஷ்ரா (குதிரையேற்றம்), சிம்ரன் சிங் ஷெர்கில் (போலோ), பூனம் யாதவ் (கிரிக்கெட்), ஸ்வப்னா பர்மன் (தடகளம்)

அர்ஜூனா விருது

தயான் சந்த் விருது: மனோஜ் குமார் (மல்யுத்தம்), சி லால்ரெம்சங்கா (வில்வித்தை), அரூப் பாசக் (டேபிள் டென்னிஸ்), நிட்டென் கிர்தானே (டென்னிஸ்), மானுவேல் ஃப்ரெட்ரிக்ஸ் (ஹாக்கி)

தயான் சந்த் விருது

துரோணாச்சார்யா விருது (வழக்கமான வகை): மொகிந்தர் சிங் தில்லோன் (தடகளம்), சந்தீப் குப்தா (டேபிள் டென்னிஸ்), விமல் குமார் (பேட்மிண்டன்)

துரோணாச்சார்யா விருது

துரோணாச்சார்யா வாழ்நாள் விருது: சஞ்சய் பரத்வாஜ் (கிரிக்கெட்), ரம்பிர் சிங் கோகர் (கபடி), மெஷ்பன் படேல் (ஹாக்கி)

உயரிய விருதான கேல் ரத்னா விருதை பெறும் முதல் பாரா ஒலிம்பிக் வீராங்கனை என்ற சாதனையை தீபா மாலிக் படைத்தார்.

ஜடேஜா

பஜ்ரங் புனியா, ஜடேஜா, தடகள வீரர் முகம்மது அனாஸ் யாகியா ஆகியோர் வெளிநாடுகளில் விளையாடிக் கொண்டிருப்பதால், விருது வழங்கும் விழாவில் அவர்களால் கலந்துகொள்ள முடியவில்லை.

ABOUT THE AUTHOR

...view details