நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தங்களால் அத்தியாவசிய பொருள்கள்கூட வாங்க முடியவில்லை, குறிப்பாக ரேஷன் பொருள்கள் வாங்குவதற்குக்கூட போராட வேண்டியுள்ளது என்று இந்திய மகளிர் கோ-கோ அணியின் கேப்டன் நஸ்ரின் சில நாள்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
மேலும், தனது பிரச்னைகளை தேசிய கோ-கோ கூட்டமைப்பு கண்டுகொள்ளவில்லை என்றும், அதனால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ட்விட்டரில் தனது பிரச்னைகள் குறித்து தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து நஸ்ரினின் பதிவு நாடு முழுவதும் வேகமாக பரவத்தொடங்கியதுமே, இந்திய கோ-கோ கூட்டமைப்பு நஸ்ரினின் வங்கி கணக்கிற்கு ஒரு லட்சம் ரூபாய் அவசரத் தொகையாக செலுத்தியது.