ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடர் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், டோக்கியோவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில், மகளிர் தனிநபர் ரிகர்வ் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி, சக நாட்டைச் சேர்ந்த அன்கிதா பகத்துடன் மோதினார்.
இப்போட்டியில் இலக்குகளை துல்லியமாக எய்த தீபிகா குமாரி 6-0 என்ற கணக்கில் அன்கிதா பகத்தை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். அதேசமயம், இப்போட்டியில் தோல்வியடைந்த அன்கிதா பகத்திற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இந்திய வில்வித்தை சம்மேளனம் இடைநீக்கம் செய்யப்பட்டதால் இவ்விரு வீராங்கனைகளும் நடுநிலை தடகள வீராங்கனைகளாகவே (Nuetral athelete) போட்டியில் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்திய ஜோடி!