உலக மல்யுத்த ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடர் எஸ்டோனியா நாட்டில் நடைபெற்றது. இதில், ஆடவர் 86 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் தீபக் பூனியா, ரஷ்யாவின் அலிக் ஷெப்சுகோவுடன் மோதினார். இப்போட்டியில் இருவரும் தலா இரண்டு புள்ளிகளை பெற்றதால் 2-2 என்ற கணக்கில் போட்டி டையில் முடிந்தது. இருப்பினும், ஆட்டத்தின் கடைசி புள்ளியை தீபக் பூனியா பெற்றதால், அவர்தான் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டது. இதனால், அவர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
மல்யுத்தம்: 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம்! - Junior World Wrestling
உலக மல்யுத்த ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடரில் 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
Deepak Punia
இதன்மூலம், 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.முன்னதாக, 2001இல் இந்திய வீரர் ரமேஷ் குமார் (69கிலோ), பல்விந்தர்சிங் சீமா (130கிலோ) ஆகியோர்தான் தங்கம் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.