இந்தியாவின் நட்சத்திர ஜூனியர் மல்யுத்த வீரராக வலம் வருபவர் தீபக் புனியா. இவர் இந்தாண்டு நடைபெற்ற சீனியர் உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தத் தொடரில் இந்தியாவிற்காக வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனைப் படைத்தார்.
இந்நிலையில் இந்தியாவின் தீபக் புனியா, சர்வதேச மல்யுத்த அமைப்பினால் வழங்கப்படும் ஆண்டின் சிறந்த ஜூனியர் மல்யுத்த வீரர் என்ற விருதைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார். மேலும் இந்தியாவிற்காக இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற சாதனையையும் புனியா பெற்றுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ' இந்த விருதைப் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. மேலும் உலகின் சிறந்த வீரர்களிடையே நான் இந்த விருதைப் பெற்றதால், எனக்கு புதிய ஒரு உத்வேகம் கிடைத்துள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
தீபக் புனியா, உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியதன் மூலம் ஜூனியர் பிரிவிலிருந்து சீனியர் மல்யுத்தப் பிரிவிற்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'மேரி மீ...' ரசிகையின் கோரிக்கைக்கு இலங்கை கிரிக்கெட் வீரர் அளித்த சுவாரஸ்ய பதில்