பர்மிங்காம் : 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆண்களுக்கான (92 கிலோவுக்கு மேல்) குத்துச்சண்டை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாகர் இங்கிலாந்தின் டீலிசியஸ் ஓரியை எதிர்கொண்டார்.
இதில் சண்டிகரை சாகர் 0-5 என்ற கணக்கில் இங்கிலாந்தின் டீலிசியஸ் ஓரியிடம் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இது சாகரின் முதல் காமன்வெல்த் விளையாட்டுப் பதக்கமாகும். குத்துச்சண்டை போட்டிகளை இந்தியா ஏழு பதக்கங்களுடன் (மூன்று தங்கம், ஒரு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலம்) பெற்றுள்ளது.
இதையும் படிங்க : செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா : 9-வது சுற்று முடிவுகள்