பர்மிஹ்காம்: 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஒட்டப்பந்தயத்தில் இந்தியாவின் அவினாஷ் முகுந்த் சேபிள் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
இவர் 8 நிமிடம் 11.20 வினாடிகளில் இலக்கை கடந்து இந்தியாவுக்கு 10ஆவது வெள்ளியை பெற்றுக்கொடுத்துள்ளார். காமன்வெல்த் 2022 தொடரில், தடகள போட்டிகளில் இந்தியா பெரும் நான்காவது பதக்கம் இது.
முன்னதாக, 10,000 மீ. நடை ஒட்டப்பந்தயத்தின் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி வெள்ளி வென்றார். அதே போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை பாவ்னா ஜாட் கடைசி இடத்தை பிடித்தார்.