ரியாத் : சவுதி அரேபியா கால்பந்து தொடரில் அல் நசர் அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 400 கோல்கள் அடித்து அசத்தி உள்ளார்.
சவுதி அரேபியா கால்பந்து லீக் தொடர் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் அல் நசர் அணிக்காக போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருகிறார்.
இதில் நேற்று (நவ. 4) நடந்த போட்டி ஒன்றில் அல் நசர் மற்றும் அல்-கலீஜ் அணிகள் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் அல் நசர் அணி வீரர் ரொனால்டோ 26வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு அல் நசர் வீரர் அய்மெரிக் லபோர்ட் ஆட்டத்தின் 58வது நிமிடத்தில் அசத்தல் கொல் அடித்து அணியின் கோல் கணக்கை உயர்த்தினார்.
ஆட்ட நேர முடிவில் அல் நசர் அணி 2க்கு 0 என்ற கணக்கில் அல்- கலீஜ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் மிரட்டலாக ஒரு கோல் அடித்த நிலையில் அது அவரது 400வது கோலாக அமைந்தது. இதன் மூலம் குறைந்த வயதில் 400 கோல் அடித்த கால்பந்து வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்தார்.
கால்பந்து உலகில் முன்னணி வீரராக வலம் வருபவர் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, தன்னுடைய கிளப் கால்பந்து பயணத்தை இங்கிலாந்தின் புகழ்பெற்ற மான்செஸ்டர் அணியுடன் தொடங்கினர். அதன் பின்னர் தான் அவரின் திறமைகள் உலகெங்கிலும் பரவத் தொடங்கின.
2003ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை மான்செஸ்டர் அணியில் இருந்த ரொனால்டோ, 2009ஆம் ஆண்டு ஸ்பெயின் கிளப்பான மாட்ரிட் அணியில் இணைந்தார். சுமார் 90 மில்லியன் யூரோக்கள் கொடுத்து ரியல் மாட்ரிட் அணி அவரை விலைக்கு வாங்கியது. அதுவரை எந்த ஒரு வீரரும் அந்த விலைக்கு வாங்கப்பட்டதில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் உலகின் அதிக விலை உயர்ந்த கால்பந்து வீரராக ரொனால்டோ அறியப்பட்டார். தற்போது, சவூதி அரேபியாவின் அல் நசர் அணிக்காக விளையாடி வருகிறார். வருடத்திற்கு ஆயிரத்து 770 கோடி சம்பளத்திற்கு ரொனால்டோ ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் கோல் அடித்ததின் மூலம் கால்பந்து வரலாற்றில் 400 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதையும் படிங்க:Virat Kohli Birthday : பிறந்த நாள் வாழ்த்துக்கள் கிங் கோலி! சிறப்பு தொகுப்பு!