மான்செஸ்டர்:போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து சூப்பர்ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அவரது ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் ஆகியோருக்கு சமீபத்தில் ஆண், பெண் என இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இதில், ஆண் குழந்தை பிறக்கும்போதே உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
அதனை உறுதிப்படுத்தி கிறிஸ்டியானோ ரொனால்டோ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ரொனால்டோ - ரோட்ரிக்ஸ் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள பதிவில்,"எங்களுக்கு பிறந்த ஆண் குழந்தை காலமான செய்தியை மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்துகொள்கிறேன். எந்தவொரு பெற்றோரும் உணரக்கூடிய மிகப்பெரிய வலி இது.
தற்போது பிறந்த பெண் குழந்தை மட்டும் இந்த தருணத்தில் எங்களுக்கு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. மிக சிறந்த வகையில் எங்களில் சிகிச்சை அளித்து உறுதுணையாக இருந்த மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.