தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பு கரோனா தடுப்பூசி அவசியம் - சுஷில் குமார் - டோக்கியோ ஒலிம்பிக்

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் நெருங்கிவரும் நிலையில், வீரர்களுக்கு கரோனா வைரஸ் தடுப்பூசி அவசியம் என்று இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார் தெரிவித்துள்ளார்.

சுஷில் குமார்
சுஷில் குமார்

By

Published : Dec 1, 2020, 10:00 AM IST

கரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக பயிற்சியின்போது வீரர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள், சவால்கள் குறித்து மல்யுத்த வீரர் சுஷில் குமார் பகிர்ந்துள்ளார். அப்போது பேசிய அவர், "ஒலிம்பிக் தொடருக்கான நாள்கள் நெருங்கிவருகின்றன. ஒலிம்பிக்கிற்கு வீரர்கள் தயாராகிவரும் நிலையில், கரோனா தடுப்பூசி அவசியம் என்று நான் உணர்கிறேன்.

இந்த வைரஸ் காரணமாக எனது அணி வீரர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வீரர்களுக்கு மிகவும் கடினமான சூழ்நிலை. பயிற்சியை மேற்கொள்ளும் வீரர்கள் தொற்றால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது. எனவே ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக கரோனா தடுப்பூசி பொதுப் பயன்பாட்டிற்கு வருவது மிகவும் முக்கியமானது.

வீரர்கள் அனைவரும், கரோனா தடுப்பு விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றி, உடல்நலத்தைச் சரியாக கவனித்துக்கொள்ள வேண்டும். ஒலிம்பிக்கிற்குத் தயாராகிவரும் சூழலில் வீரர்கள் பாதுகாப்பு நலனில் கவனம் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் ஒருவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும், குழுவில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். எனவே நீங்கள் உங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும். ஆகையால், பயிற்சி மேற்கொள்ள வீரர்கள் எங்கு சென்றாலும் எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்ற வேண்டும். ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பாக தடுப்பூசிக்காக காத்திருக்கிறோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க:“இந்திய அணியின் நம்பகமான வீரராக இருக்க விருப்பம்” - ஷம்ஷர் சிங்

ABOUT THE AUTHOR

...view details