உலகெங்கிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் காரணமாக இதுவரை 28 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துமுள்ளனர். மேலும் இப்பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதன் காரணமாக 124 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் இந்தாண்டு டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி முதன் முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தொடர் ஒத்திவைப்பால் பாதிக்கப்பட்டுள்ள வீரர்கள் மற்றும் அணிகளுக்கு தங்களுடைய நிதியுதவியை வழங்குவதாக சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.