தமிழ்நாடு

tamil nadu

நமது மக்களைக் காக்க வீட்டிலேயே இருப்போம் - மனிகா பத்ரா!

By

Published : Mar 29, 2020, 9:45 AM IST

கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக நாடு முழுவது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கடினமாக இருந்தாலும், அது மக்களின் பாதுகாப்பிற்காகத்தான் என்று இந்தியவின் நட்சத்திர டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா (Manika Batra) தெரிவித்துள்ளார்.

COVID-19 outbreak: We have to stay at home for our people, says Manika Batra
COVID-19 outbreak: We have to stay at home for our people, says Manika Batra

கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இந்தியாவில் இதுவரை 900-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 24 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.

இந்நிலையில் இந்தியாவின் நட்சத்திர டேபிள் டென்னிஸ் வீராங்கனையான மனிகா பத்ரா செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர், "இது மிகவும் கடினமான சூழல்தான், ஆனால் பொது சுகாதாரம், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாம் வீட்டிலேயே இருக்க வேண்டும்.

அதனை ஒருபோது யாரும் மறந்துவிடக் கூடாது. மேலும் பெற்றோர் தற்போது கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுங்கள். அப்போதுதான் உங்களது குழந்தைகளுக்குப் புதுமையான சிந்தனைகள் தோன்றுவதற்கு உதவியாக இருக்கும்.

மேலும், ஐஓசி தற்போது வீரர்களின் பாதுகாப்பினைக் கருதி ஓலிம்பிக் போட்டிகளை ஒத்திவைத்துள்ள முடிவு வரவேற்கத்தக்க ஒன்று. நாங்கள் பயிற்சி பெறுவதற்குத் தேவையான நேரம் தற்போது கிடைத்துள்ளது. அதேபோல் வெளியில் நடப்பதைச் சிந்தித்தாலே நாம் வீட்டிலேயே இருந்துவிடுவோம். இத்தருணத்தைப் பயன்படுத்தி உங்களது உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:'டெஸ்ட்டில் கேப்டனான முதல் போட்டியை மறக்கவே முடியாது' - பாண்டிங்

ABOUT THE AUTHOR

...view details