கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இதுவரை உலகம் முழுவதும் ஏழு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, 32ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், உட்பட பல்வேறு முக்கிய தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக டேபிள் டென்னிஸ் தொடரை ஒத்திவைப்பது குறித்து விவாதங்கள் நடைபெற்றன.