மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை டேக்மி சர்கார். இவர் கடந்த மாதம் ஸ்பெயின் நாட்டில் நடைபெறவிருந்த ஸ்பானிஷ் டேபிள் டென்னிஸ் லீக் தொடரில் பங்கேற்பதற்காக மலாகாவிற்கு சென்றுள்ளார். இதையடுத்து, இவர் நேற்று இந்தியாவுக்கு திரும்பவிருந்ததால், விமானத்தில் முன்பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில், கரோனா வைரசால் இந்தியாவில் ஏப்ரல் 3 வரை அனைத்து சர்வதேச விமான சேவைகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இதனால், அவர் மலாகாவில் தஞ்சமடைந்துள்ளார். ஸ்பெயினில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், டேக்மி சர்கார் அங்கு பாதுகாப்பாக இருக்கிறாரா என்ற அச்சம் அவரது பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளது.