கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை 490-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 9 பேர் உயிரிழந்தும் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், அவர்களுக்கு உதவ பல பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்துவருகின்றனர்.
இந்த வரிசையில் தற்போது இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீரரான பஜ்ரங் புனியாவும் இணைந்துள்ளார். இவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தனது ஆறுமாத ஊதியத்தை, ஹரியானா நிவாரண நிதிக்கு வழங்குகிறேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஊதியத்தை வழங்கிய வங்கிப் பரிமாற்ற திரைப்பதிவையும் (Screen Shot) அதில் இணைத்துள்ளார்.