சீனாவின் ஹூபே உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களிலும் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 492 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 24,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சீனாவிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்வோரை முழுமையான பரிசோதனை செய்த பிறகே, அனுமதித்து வருகின்றனர். கரோனா வைரஸின் தாக்கத்தால் சீனாவில் நடைபெறவிருந்த பல்வேறு விளையாட்டு போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
சீனாவை தொடர்ந்து அண்டை நாடுகளில் இந்த வைரஸ் வேகமாக பரவிவருகிறது. இந்த வைரஸால் வரும் ஜூலை மாதம் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி ரத்தாகுமா என்ற அச்சம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில், இது குறித்து டோக்கியோ ஒலிம்பிக்கின் தலைமை செயலாளர் தோஷிரோ முடோ கூறியதாவது,