தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்த காங்கிரஸ்!

சென்னை: ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கோமதி மாரிமுத்து

By

Published : Apr 27, 2019, 2:48 PM IST

கத்தாரின் தோகா நகரில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியின் 800 மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து நேற்று தாயகம் திரும்பினார். அவருக்கு, வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, பல்வேறு பிரச்னைகளைத் தாண்டி தங்கம் வென்றவருக்கு அனைவரும் பாராட்டுகளைத் தெரித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பாக ரூ.5 லட்சம் கோமதிக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

மேலும், திமுக சார்பாக கோமதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் சாதித்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசியல் கட்சிகள் நிதியுதவி அறிவித்துள்ள நிலையில், அரசு சார்பாக ஒருவர் கூட நேரில் சென்று பார்க்காதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details