ஜெர்மனியின் கோலோன் நகரில் 2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை குத்துச்சண்டை தொடரில் இந்தியா உட்பட 21 நாடுகள் பங்கேற்றது. இதில் இந்தியா சார்பாக ஏழு வீரர்கள் கொண்ட அணி பங்கேற்றது. இதில் 54 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட இந்திய வீராங்கனை மீனா குமாரி இறுதிப்போட்டியில் தாய்லாந்து வீராங்கனை மச்சாய் புன்யா நட்டை எதிர்த்து ஆடினார். அதில் அபாரமாக ஆடிய மீனா குமாரி, தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்தார்.
உலகக்கோப்பை குத்துச்சண்டை தொடர்: இந்தியாவுக்கு 5 பதக்கங்கள்! - சாக் ஷி
பெர்லின்: கோலோன் 2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை குத்துச்சண்டை தொடரில் இந்திய வீரர்கள் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, இரண்டு வெண்கல பதக்ககங்களை வென்று சாதனைப் படைத்துள்ளனர்.
அதேபோல் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சாக்ஷியை எதிர்த்து அயர்லாந்து வீராங்கனை மிக்கேலே வால்ஷ் ஆடினார். இதில் அபாரமாக ஆடிய வால்ஷிடம் 5-0 என்ற கணக்கில் சாக்ஷி தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். அதேபோல் மற்றொரு வீராங்கனையான பாசுமட்டரி 64 கிலோ எடைப்பிரிவில் சீனாவின் செங்யூ யாங்கிடன் போராடித் தோல்வியடைந்து வெள்ளி வென்றார்.
அதேபோல் 51 கிலோ எடைப்பிரிவில் பிங்கி ராணியும், 60 கிலோ எடைப்பிரிவில் பர்வீனும் வெண்கலம் வென்று அசத்தினர். மொத்தமாக இந்தியாவுக்கு ஒரு தங்கம் , இரண்டு வெள்ளி, இரண்டு வெண்கலம் என ஐந்து பதக்கங்களை வென்று இந்தியா சாதனைப் படைத்துள்ளது.