கொலோன் உலகக்கோப்பை குத்துச்சண்டை போட்டிகள் ஜெர்மனியில் நடைபெற்றன. இதன் நிறைவு நாளான நேற்று (டிசம்பர் 19) இந்திய குத்துச்சண்டை வீரர்கள் 9 பதக்கங்களை தங்கள் வசப்படுத்தினர்.
தங்கப்பதக்கம்:
இத்தொடரின் மகளிர் 64 கிலோ பிரிவின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் சிம்ரஞ்சித் கவுர், ஜெர்மனியின் மாயா கெளீன்ஹான்ஸை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார்.
அதேபோல் மகளிர் 57 கிலோ பிரிவில் இந்தியாவின் மனிஷா மவுன் - சக நாட்டு வீராங்கனை சாக்ஷி சவுத்ரியை 3:2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
இத்தொடரின் ஆடவர் 52 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அமீத் பங்கல், பிரான்சின் பிலால் பினம்மாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.