தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சர்ச்சையில் சிக்கிய பயிற்சியாளர்...! - வீட்டுக்கு அனுப்பிய அணி நிர்வாகம்! - வேல்ஸ் அணி

வேல்ஸ் அணியின் துணை பயிற்சியாளர் ராப் ஹவ்லி அணியின் ஒப்பந்த விதிகளை மீறியதாக அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

assistant coach Howley

By

Published : Sep 18, 2019, 2:31 PM IST

உலகின் புகழ்மிக்க ரக்பி அணிகளில் ஒன்றாக திகழ்ந்துவரும் வேல்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளரக இருந்தவர் ராப் ஹவ்லி. இவர் கடந்த பதினோறு ஆண்டுகளாக வேல்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக செயல்பட்டுவந்தார்.

தற்போது 2019ஆம் ஆண்டிற்கான் ரக்பி உலகக்கோப்பை போட்டிகள் ஜப்பானில் நடைபெறவுள்ளன. இந்நிலையில் அணியின் ஒப்பந்தத்தை மீறியதாக ராப் ஹவ்லியை வேல்ஸ் அணி நிர்வாகம் அணியிலிருந்து நீக்கியுள்ளது.

சர்ச்சையில் சிக்கிய பயிற்சியாளர்

இதனால் அவர் இந்த ஆண்டு ரக்பி உலகக்கோப்பைத் தொடரில் வேல்ஸ் அணியை வழிநடத்த முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்.

வரும் செப்டம்பர் 20ஆம் தேதி முதல் ரக்பி உலகக்கோப்பை போட்டிகள் ஜப்பானில் நடைபெறுகின்றன. வேல்ஸ் அணி செப்டம்பர் 23ஆம் தேதி ஜார்ஜியா அணியை எதிர்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details