தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

முதலமைச்சர் கோப்பை: 1200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! - CM Trophy

சேலம்: முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் 1200க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

cm-trophy-more-than-1200-people-participated-in-district-level-sports-meet
cm-trophy-more-than-1200-people-participated-in-district-level-sports-meet

By

Published : Feb 13, 2020, 2:46 PM IST

தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. 25 வயதுக்குட்பட்ட அனைவரும் கலந்துகொள்ளலாம் என்பதால், இது விளையாட்டு வீரர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திற்கான விளையாட்டு போட்டிகள் இன்றும் நாளையும் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த விளையாட்டு போட்டியினை மாவட்ட ஆட்சியர் ராமன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், வாலிபால், பாக்சிங், இறகு பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் 1200க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிபடுத்தினர்.

மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி

இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்த விளையாட்டு வீரர்கள், மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற தகுதி பெறுகின்றனர். இந்த வருடம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்பதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தியதில், தமிழ்நாட்டிலேயே சேலத்தில்தான் அதிமான விளையாட்டு வீரர்கள் பதிவு செய்து பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி!

ABOUT THE AUTHOR

...view details