இந்தியாவின் பளு தூக்குதல் வீராங்கனையான மீராபாய் சைக்கோம் சானு, கடந்தாண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி, தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் தொடரில் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து, அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட இணையமெங்கும் பாராட்டுகள் குவிந்தன.
அதற்குப் பதிலளிக்கும் வகையில், "201 கிலோவை தூக்குவது என்பது எப்போதும் எனக்கு மிக கடினமாகவே இருந்துள்ளது. எனது முயற்சியை பாராட்டும் கோடிக்கணக்கான மக்களுக்கு எனது நன்றியைக் கூறிக்கொள்கிறேன். அனைத்து சவால்களும் நாம் முயற்சித்தால் ஒரு படி தூரத்தில்தான் இருக்கிறது" என்று தங்க மங்கை மீராபாய் சானு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதைப்பகிர்ந்த சௌரப் சின்ஹா என்ற ஊடகவியலாளர் அந்த ட்வீட்டை பகிர்ந்து,"தார் தன்னுடைய சுத்தியலை (ஆயுதம்) கைவிடும் நேரம் வந்துவிட்டது" என்று குறிப்பிட்டு மார்வல் காமிக் கதாபாத்திரமான 'தார்' பட நாயகன் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தை டேக் செய்து பதிவிட்டிருந்தார். அதாவது சக்திவாய்ந்த 'தார்' கதாபாத்திரத்தை, மீராபாய் சைக்கோம் மிஞ்சிவிட்டதாக மறைமுகமாகத்தெரிவித்துள்ளார்.