தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டோக்கியோ ஜிம்னாஸ்டிக்ஸில் சீனா பங்கேற்பது உறுதி - சின ஜிம்னாஸ்டிக்ஸ் அணியின் மேலாளர் யே ஜென்னன்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ’டோக்கியோ ஜிம்னாஸ்டிக்ஸ்’ போட்டியில் சீனா பங்கேற்கும் என சீன ஜிம்னாஸ்டிக்ஸ் அணியின் மேலாளர் தெரிவித்துள்ளார்.

China confirms participation in Tokyo gymnastics event in November
China confirms participation in Tokyo gymnastics event in November

By

Published : Oct 14, 2020, 4:40 PM IST

சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பு சார்பில் இந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் பங்கேற்கும் ’டோக்கியோ ஜிம்னாஸ்டிக்ஸ்’ போட்டி, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்த திட்டமிட்டுள்ளது.

மேலும் டோக்கியோ வரவுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை ஜப்பான் அரசு அறிவிக்கவில்லை. மாறாக வீரர்கள் தங்கும் இடம், போக்குவரத்து விதிமுறைகளை மட்டும் வழங்கியுள்ளது.

இந்நிலையில், டோக்கியோவில் நடைபெறவுள்ள ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் சீனா பங்கேற்கும் என அந்நாட்டு ஜிம்னாஸ்டிக்ஸ் அணியின் மேலாளர் யே ஜெனன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து யே ஜெனன் கூறுகையில், “ஊரடங்கு காலத்திற்குப் பின்னர் நாங்கள் பங்கேற்கும் முதல் சர்வதேசப் போட்டி இதுவாகும். இது மிகவும் சவாலான போட்டி. ஜப்பான் செல்லவுள்ள எங்களது வீரர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்தப் பிறகே போட்டியில் பங்கேற்கவுள்ளனர். அதேபோல் ஜப்பானிலிருந்து நாடு திரும்பிய பிறகும் ஏழு நாள்களுக்கு வீரர்கள் தனிமைப்படுத்தப்படுவர்” என்றார்.

இதையும் படிங்க:இங்., அணியுடனான போட்டியை ரத்து செய்தது நியூசி.,!

ABOUT THE AUTHOR

...view details