கரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் மாணவர்களுக்கான சதுரங்கப்போட்டி நடத்துவது வழக்கம்.இந்நிலையில் இந்த ஆண்டிற்கான சதுரங்கப்போட்டி கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தொடங்கியது .இது எட்டு வயது,பதினான்கு வயது, பதினாறு வயது என மூன்று பிரிவுகளில் நடத்தப்படுகின்றன.
கரூரில் சதுரங்கப்போட்டி தொடங்கியது:மாணவர்கள் உற்சாகம்! - karur
கரூர்: அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சதுரங்க விளையாட்டுப் போட்டி தொடங்கியது.
chess competition in karur
இதில் வெற்றிபெறும் மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அதில் வெற்றி பெறுபவர்கள் பெரம்பலூர் மண்டல அளவிலான போட்டிகளில் கலந்துகொள்வார்கள்.இறுதியாக மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களே மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.இந்த சதுரங்கப்போட்டியில் மாணவர்கள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.