தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் 100 ஆடவர் போட்டி: தனியாக கலக்கும் நாகல் - ஜுங்

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் 100 ஆடவர் சாம்பியன் போட்டியில் தைவான் நாட்டை சேர்ந்த ஜுங்கை வீழ்த்தி நாகல் காலிறுதிக்கு முன்னேறினார்

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 16, 2023, 10:40 PM IST

சென்னை: சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் 100 ஆடவர் சாம்பியன் போட்டிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா சார்பில் களத்தில் இருந்த நாகல் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இந்தியா சார்பில் களம் இறங்கிய அனைத்து வீரர்களும் லீக் சுற்றிலே வெளியேறிய நிலையில், நாகல் மட்டும் சிறப்பாக விளையாடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

இன்று நடைபெற்ற லீக் இறுதிச்சுற்றில் தைவான் நாட்டை சேர்ந்த ஜுங்கை எதிர்கொண்டார். முதல் செட்டை 3-6 கணக்கில் தோற்ற நிலையில் அடுத்த இரண்டு செட்டுகளை 6-2, 6-0 என்ற செட் கணக்கில் கைப்பற்றி வெற்றியை உறுதி செய்தார்.

மேலும் இன்று நடைபெற்ற டபுள்ஸ் போட்டியில் இந்திய வீரர்கள், மற்றொரு இந்தியா வீரர்களை எதிர்கொண்டனர். அதில் பாலாஜி நெடுஞ்செழியன் ஜோடி நாகல் சசிகுமார் ஜோடியை 7-6, 6-0 என்ற செட் கணக்கில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினர்.

இதையும் படிங்க: Chennai Open: டென்னிஸ் டபுள்ஸ் போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர் வெற்றி!

ABOUT THE AUTHOR

...view details