தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#PKL: மரண மாஸ் காட்டிய அஜய் தாக்கூர்; தமிழ் தலைவாஸ் மெர்சல் வெற்றி! - புரோ கபடி லீக்

புரோ கபடி லீக் தொடரின் இன்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 34- 28 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத் அணியை வீழ்த்தியது.

மரண மாஸ் காட்டிய அஜய் தாக்கூர்

By

Published : Aug 11, 2019, 2:57 AM IST

புரோ கபடி லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் அணி - குஜராத் ஃபார்ட்டியூன் ஜெயின்ட்ஸை எதிர்கொண்டது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே குஜராத் அணி 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

அஜய் தாக்கூர்

இந்த தருணத்தில், ஐஸ்மேன் என்றழைக்கப்படும் தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாக்கூர் ரைய்டிங்கில் சிறிப்பாய்ந்து புள்ளிகளை பெற்றார். அவரது சிறப்பான ஆட்டத்தால் தமிழ் தலைவாஸ் அணி முதல் பாதியில் 15-10 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது. அதில், அஜய் தாக்கூர் மட்டுமே ஆறு புள்ளிகளை எடுத்திருந்தார்.

தமிழ் தலைவாஸ்

இதைத்தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாம் பாதியில், குஜராத் அணி ரைய்டிங் மூலம் புள்ளிகளை பெறத் தொடங்கியது. இந்த நிலையில், தமிழ் தலைவாஸ் அணியின் ரைய்டர் ராகுல் சவுதிரி புள்ளி பெற ஆட்டம் மீண்டும் தமிழ் தலைவாஸ் அணியின் பக்கம் திரும்பியது. இதன்பின்னர், தமிழ் தலைவாஸ் அணி டிஃபெண்டிங்கில் சிறப்பாக ஈடுபட்டது. இதனால், இப்போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 34 - 28 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் அதிகபட்சமாக அஜய் தாக்கூர் ஒன்பது புள்ளிகளை பெற்றார்.

இந்த வெற்றியின்மூலம், தமிழ் தலைவாஸ் அணி விளையாடிய ஆறு போட்டிகளில் மூன்று வெற்றி, இரண்டு தோல்வி, ஒரு டை என 20 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details