சைக்கிள் பந்தயம் என்பது நமது உடல் வலிமையையும், மன வலிமையையும் சோதிக்க கூடிய ஒன்றாக உள்ளது. பிற பந்தயங்களைப் போன்று இதில் அனைவராலும் பங்கேற்க முடியாது. ஏனெனில் நூற்றுக்கணக்கான தூரங்களுக்கு நடைபெறும் இந்த பந்தயத்தில் பங்கேற்க வேண்டுமென்றால் நிச்சயம் கடும் பயிற்சி தேவைப்படுகிறது.
சோதனை சைக்கிள் பந்தயத்தில் கனடா வீரர் முதலிடம் - சைக்கிள் பந்தயம்
வாஷிங்டன்: யூட்டா டூர் சைக்கிள் பந்தயத்தின் சோதனைப் போட்டியில் கனடா வீரர் ஜேம்ஸ் பிக்கோலி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
சைக்கிள் போட்டிகள் பல்வேறு நாடுகளிலும் பல சுற்றுகளாக நடத்தப்படும். அந்த வகையில் தற்போது அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் உட்டா டூர் சைக்கிள் பந்தயம் இன்று நடைபெறுகிறது. முன்னதாக, ஸ்னோபேர்டு ரெசார்ட்டில் நேற்று நடைபெற்ற சோதனை பந்தயத்தில் பல வீரர்களும் பங்கேற்றனர்.
இதில் கனடாவைச் சேர்ந்த வீரர் ஜேம்ஸ் பிக்கோலி நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 5.3 கிலோ மீட்டர் தூரத்தை எட்டு நிமிடங்கள் 37.59 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து இரண்டாவதாக அமெரிக்க வீரர் லாசன் கிரேடாக்கும், மூன்றாவதாக ரோம் வீரர் செர்கெய் ட்வெட்கோவ்வும் வந்தனர்.