தோகா (கத்தார்): உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்றிரவு (நவ. 28) தோகாவில் உள்ள 974 ஸ்டேடியத்தில் நடந்த 'ஜி' பிரிவு லீக் ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' அணியும், 5 முறை சாம்பியனுமான பிரேசில் அணி, சுவிட்சர்லாந்தை எதிர்கொண்டது.
பிரேசில் வீரர்கள் தொடக்கம் முதலே அதிவேக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சுவிட்சர்லாந்து வீரர்கள் கோல் அடிப்பதை காட்டிலும் எதிரணியின் வாய்ப்பை முறியடிப்பதிலேயே கூடுதல் கவனம் செலுத்தினர். இதனால் பிரேசில் வீரர்களால் அவ்வளவு எளிதில் சுவிட்சர்லாந்தின் தற்காப்பு அரணை தகர்க்க முடியவில்லை. முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.