தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடலுக்கு ரசிகர்கள் அஞ்சலி - pele funeral

கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

கால்பந்து ஜாம்பவான் பீலே
கால்பந்து ஜாம்பவான் பீலே

By

Published : Jan 3, 2023, 9:40 AM IST

சாண்டோஸ்:மறைந்த கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல் அஞ்சலிக்காக சாவ் பாலோவில் உள்ள அர்பானோ கால்டீரா மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதிகாலை முதலே லட்டக்கணக்கான ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்திவருகின்றனர். அதோடு கால்பந்து வீரர்களும் சாண்டோஸில் குவிந்துவருகின்றனர். புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்த பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே டிசம்பர் 29ஆம் தேதி உயிரிழந்தார்.

இவரது உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நள்ளிரவு அர்பானோ கால்டீரா மைதானத்துக்கு கொண்டவரப்பட்டது. இங்கு முன்னதாகவே காத்திருந்த லட்டக்கணக்கான ரசிகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். இந்த அஞ்சலிக்கு பின் 10 மணியளவில் இறுதி சடங்குகள் தொடங்குகின்றன.

அதன்பின் பிலேவின் உடல் வெர்டிக்கல் கல்லறையில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இவரது மறைவையொட்டி பிரேசில் முழுவதும் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.இவரது இறுதி சடங்கில் கலந்துகொண்டுள்ள, ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ, "ஒவ்வொரு நாட்டிலும் உள்ள கால்பந்து மைதானங்களில் ஒன்றிற்கு மட்டும் பீலேயின் பெயரை வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" எனக் கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க:கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு டஃப் கொடுத்த இந்தியர்கள் - முன்னாள் வீரர் உருக்கம்

ABOUT THE AUTHOR

...view details