கொலோன் உலகக்கோப்பை குத்துச்சண்டை போட்டிகள் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் 91 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் சதீஷ் குமார் பங்கேற்றார்.
இதில், இன்று (டிசம்பர் 19) நடைபெற்ற அரையிறுதிச்சுற்றில் சதீஷ் குமார், பிரான்ஸின் டிஜாமிலி டினி மொய்ண்ட்ஸேவை எதிர்கொண்டார். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சதீஷ் குமார், 4-1 என்ற புள்ளிக்கணக்கில் டிஜாமிலி டினி மெய்ண்ட்ஸேவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இத்தொடரில் நாளை (டிசம்பர் 20) நடைபெறும் 91 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிச்சுற்றில் இந்தியாவின் சதீஷ் குமார் - ஜெர்மனியின் நெல்வி டியாஃபாக்கை எதிர்கொள்ளவுள்ளார்.
இதற்கு முன்னதாக, இந்தியாவின் சதீஷ் குமார் காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டிகளில் வெள்ளிப்பதக்கமும், ஆசிய விளையாட்டு மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டிகளில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:முதல் டி20: பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து!