விளையாட்டுத் துறையில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு அடுத்தப்படியாக, அர்ஜுனா விருது கருத்தப்படுகிறது. அந்த வகையில், 2019ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதிற்காக இந்திய குத்துச்சண்டை வீரர் அமிட் பங்கலின் பெயரை, இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
அர்ஜுனா விருது - அமிட் பங்கலின் பெயர் இரண்டாவது முறையாக பரிந்துரை - இந்திய குத்துச்சண்டை சம்மேளனம்
இந்திய குத்துச்சண்டை வீரர் அமிட் பங்கலுக்கு அர்ஜுனா விருது வழங்க, இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
அர்ஜூனா விருது - அமிட் பங்கலின் பெயர் இரண்டாவது முறையாக பரிந்துரை
முன்னதாக, இவரது பெயரை அர்ஜுனா விருதுக்கு கடந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் 2012இல் ஊக்க மருந்து விவகாரத்தில் அவர் சிக்கியதால், அவருக்கு ஒராண்டு தடை விதிக்கப்பட்டதால் விருது வழங்கப்படவில்லை.
இம்முறை விருது கிடைக்கும் என தான் நம்பிக்கையுடன் இருப்பதாக, அமிட் பங்கல் தெரிவித்துள்ளார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில், இவர் 52 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.