இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கரோனா தொற்று அச்சுறுத்தலினால் தேர்தலை டிசம்பர் மாதம் நடத்துவதாக பி.எஃப்.ஐ அறிவித்தது.
ஆனால் அப்போதும் கரோனா அச்சுறுத்தலினால் தேர்தல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக பி.எஃப்.ஐ அறிவித்தது. இதைத்தொடர்ந்து தேர்தல் தேதியை பி.எஃப்.ஐ அறிவிக்க வேண்டுமென உத்திரப் பிரதேச அமெச்சூர் குத்துச்சண்டை சங்கம் டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணையில் இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு தேர்தல் தேதியை விரைவில் அறிவிக்க வேண்டும் எனத் தீர்ப்பு வந்தது. இத்தீர்பை அடுத்து வருகிற பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் தேர்தல் நடைபெறுமென பி.எஃப்.ஐ அறிவித்துள்ளது.
இதுகுறித்து பி.எஃப்.ஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில், “முன்னரே பி.எஃப்.ஐ அறிவித்ததை போல 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பிரிஸ்பேனில் ஊரடங்கு அமல்: சந்தேகத்தில் நான்காவது டெஸ்ட்?