நட்சத்திர குத்துச்சண்டை வீரரான சுமித் சங்வான், 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரின் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்றார். இந்நிலையில், இந்தியாவின் தேசிய ஊக்கமருந்து தடுப்பு பிரிவு வீரர்களிடம் தீவிர சோதனையை மேற்கொண்டது. அதனடிப்படையில் குத்துச்சண்டை வீரர் சுமித் சங்வானிடமிருந்து எடுக்கப்பட்ட சோதனை மாதிரிகளை பரிசோதித்தபோது அவர் தடை செய்யப்பட்டிருந்த ஊக்கமருந்து உட்கொண்டது நிரூபணமானது.
ஊக்க மருந்து சர்ச்சை: குத்துச்சண்டை வீரருக்கு ஓராண்டு தடை! - அனைத்து விதமான விளையாட்டுப் போட்டிகளில் ரஷ்யா பங்கேற்க அடுத்த நான்கு ஆண்டுகளுக்குத் தடை
ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் சுமித் சங்வான், தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தைப் பயன்படுத்தியதால் தேசிய ஊக்கமருந்து தடுப்புப் பிரிவினால் ஓராண்டு தடை செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து தேசிய ஊக்கமருந்து தடுப்புப் பிரிவு ஆணையம் சிமித் சங்வானுக்கு ஓராண்டு காலம் தடைவிதித்து உத்திரவிட்டுள்ளது. இதன் காரணமாக அவர் அடுத்தாண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க இயலாது. முன்னதாக, ஊக்க மருந்து விவகாரம் தொடர்பான வீரர்களின் பட்டியலை ரஷ்யா அழித்துவிட்டதால் அனைத்து விதமான விளையாட்டுப் போட்டிகளில் ரஷ்யா பங்கேற்க அடுத்த நான்கு ஆண்டுகளுக்குத் தடைவிதித்து உலக ஊக்க மருந்து அமைப்பு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா!