தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்கும் இந்திய போட்டியாளர்கள் பெயர் வெளியீடு - ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டியில் பங்கேற்கும் இந்திய குத்துச்சண்டை

ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய குத்துச்சண்டை வீரர்கள், வீராங்கனைகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மேரி கோம், mary kom
மேரி கோம், mary kom

By

Published : Dec 22, 2019, 9:57 AM IST

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்தாண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தத் தொடரில் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் இம்மாத இறுதியில் நடைபெறுகிறது.

இதனிடையே இந்தத் தகுதிச் சுற்றில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகளின் பெயர்களை இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் ஆடவர் போட்டிகளில் ஆறு பிரிவுகளின் கீழ் விளையாடவுள்ள வீரர்களும், மகளிர் போட்டிகளில் ஐந்து பிரிவுகளின் கீழ் பங்கேற்கும் வீராங்கனைகளின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி கவிந்தர் சிங் பிஸ்ட், முகம்மது ஹூசாமுதின், சச்சின், கவுரவ் சோலன்கி, விகாஸ் கிரிஷன், நவீன் போரா, துரியோதன் சிங் நெகி, சுமித் சங்வான், நமன் தவார், கவுரவ், சவ்ஹான், சதீஸ் குமார், நரேந்திரா ஆகியோர் ஆடவர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

மகளிர் அணியில் மேரி கோம், நிகாத் ஜரின், ஜோதி, ரிது க்ரேவால், சோனியா, சாக்ஷி, மனீஷா, சோனியா லாதர், எல். சரிதா தேவி, சிம்ரன்ஜித் கவுர், பவித்ரா, சசி சோப்ரா, லோவ்லின போர்கோஹைன், லலிதா, மீனா ராணி, அஞ்சலி, பூஜா ராணி, சவீதி பூரா, நுபுர், இந்த்ரஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டிகள் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் வீராங்கனைகளுக்கு டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளிலும், வீரர்களுக்கு டிசம்பர் 29, 30 ஆகிய தேதிகளிலும் போட்டிகள் நடைபெறுகின்றன.

ABOUT THE AUTHOR

...view details