புரோ கபடி லீக் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூரு புல்ஸ் - தெலுங்கு டைடன்ஸ் அணிகள் மோதின. இதில், ரைய்டிங், டிஃபெண்டிங் என இரண்டிலும் பெங்களூரு புல்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. இதனால், பெங்களூரு புல்ஸ் அணி 47-26 என்ற புள்ளிகள் கணக்கில் தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.
#pkl: பெங்களூரு புல்ஸ் ஹாட்ரிக் வெற்றி - பெங்களூரு புல்ஸ்
புரோ கபடி லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தெலுங்கு டைடன்ஸ் அணியை 47-26 புள்ளிக் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணி தோற்கடித்துள்ளது.
பெங்களூரு அணியின் ரைய்டர் பவான் குமார் இப்போட்டியில் மொத்தம் 17 புள்ளிகளை பெற்று தனது அணியின் வெற்றிக்காக உதவினார். இந்த வெற்றியின் மூலம், பெங்களூரு புல்ஸ் அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கு வெற்றி, ஒரு தோல்வி என மொத்தம் 20 புள்ளிகளுடன் தரவரசைப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் - யு மும்பா அணியை எதிர்கொள்கிறது. அதன்பின்னர், நடைபெறும் மற்றொரு போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணி, யு.பி. யோத்தா அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.