உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் கஜகஸ்தானின் நூர் சுல்தான் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 65 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் நடுவரின் தவறான முடிவால், கஜகஸ்தானின் தவ்லட் நியாஸ்பெகாவிடம் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தோல்வியைத் தழுவினார்.
இந்நிலையில் இன்று வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் மங்கோலியாவின் துல்கா ஓக்கிரை, பஜ்ரங் எதிர்கொண்டார். இந்த போட்டியில் முதல் பாதியில் 2-6 என பின்தங்கியிருந்த பஜ்ரங் புனியா, பிற்பாதியில் சிறப்பாக செயல்பட்டதால் 8-7 என்ற புள்ளிக்கணக்கில் நூலிழையில் வெற்றிபெற்றார். இதன்மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் மூன்றாவது முறையாக அவர் பதக்கத்தை கைப்பற்றியிருக்கிறார்.