தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்திய வீரர் பஜ்ரங் பூனியாவுக்கு அமெரிக்க அழைப்பு! - Madisson square

இந்திய தடகள வீரர் பஜ்ரங் பூனியா  நியூயார்க் நகர் மெடிசன் ஸ்கொயர் (Madisson Square) கார்டனில் நடைபெறவிருக்கும் கிராபில் தி கார்டன் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்குமாறு அமெரிக்க மல்யுத்த சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்திய வீரர் பஜ்ரங் பூனியாவுக்கு அமெரிக்க அழைப்பு!

By

Published : Apr 27, 2019, 10:55 PM IST

ஆடவருக்கான மல்யுத்த போட்டியில் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா முதலிடத்தில் நீடிக்கிறார். 25 வயதான இவர் ஜியான் நகரில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்று அசத்தினார்.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கும் பிரபல மடிசன் ஸ்கொயர் கார்டன் விளையாட்டு அரங்கில் ஆண்டுதோறும் மே 6 ஆம் தேதி கிராப்பில் அட் தி கார்டன் (Grapple at the Garden) மல்யுத்தப் போட்டி நடைபெறும்.

இதேபோல், இந்த ஆண்டு நடைபெறவுள்ள போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா பங்கேற்குமாறு அமெரிக்க மல்யுத்த சம்மேளனம் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன் மூலம், அமெரிக்காவின் பிரசித்த பெற்ற கிராப்பில் அட் தி கார்டன் மல்யுத்த போட்டியில் கலந்துக் கொள்ளும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, இந்தப் போட்டியில் அவர் அமெரிக்காவின் இரண்டுமுறை நேஷனல் சாம்பியன் பட்டம் வென்ற யியானி தியாகோமாஹ்லிஸ் (Yianni Diakomahlis) உடன் மோதவுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details